SUWAHAS MAL SEVANA GARDEN CENTRE


முகப்பு
“சுவஹஸ் மல் செவன” பூங்கா
 அறிமுகம்


சுவஹஸ் மல் செவன பூங்கா மையமானது 2006 ஜுன் 9 ஆம் திகதி கொழும்பு ரொறிங்டனில் தாபிக்கப்பட்டது. உயர் தொழில்நுட்பத்துடனான  ஒரு நவீன பூங்கா மையமாக அது விருத்தி செய்யப்பட்டது. இங்கு உயர் தரத்திலான நடுகைப் பொருட்களும் மலர் உற்பத்திகளும் நியாயபூர் வமான விலைகளில் விற்பனைக்குண்டு. மேல் மாகாணத்தின் பயிர் வளர்போருக்கம் பொது மக்களுக்கும் தாவரவியல் மற்றும் பூந்தோட்டவியல் தொடர்பான அறிவையும் தொழில்நுட்பத்தையூம் வழங்குவதற்கான ஒரு கல்விக் கூறாகவும் இந்நிலையம் செயற்படும்.

இதற்கு மேலதிகமாக, கொழும்பு மாவட்டத்தில் உள்ள சுவஹஸ் மல் அமைப்பு உறுப்பினர் களுக்காக மலர்க் கண்காட்சிகள் மற்றும் தாவர விற்பனைகள் என்பவற்றை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட சுவஹஸ் மல் நிகழ்ச்சித்திட்டமும் இங்கிருந்தே ஒருங்கிணைப்புச் செய்யப்படுகின்றது.

சுவஹஸ் மல் பூங்கா மையமானது வெட்டப்பட்ட மலா;களின் மொத்த மற்றும் சில்லறைச் சந்தைப்படுத்தலை இலகுபடுத்துவதற்கும் திட்டமிட்டு வருகின்றது. தற்சமயம் தாவரவியற் பூங்காக்களில் உற்பத்தி செய்யப்படும் வெட்டப்பட்ட மலா;களும் நிரப்புப் பொருட்களும் இம்மையத்தில் சிறிய அளவில் சில்லறை விலைக்குண்டு. இச்சில்லறை விற்பனை நிலையத்தை, வெட்டப்பட்ட மலர்கள் மற்றும் நில வடிவமைப்பு நோக்கங்களுக்கான சாடியிலிடப்பட்ட பொpய தாவரக் கன்றுகள் என்பவற்றின் ஓர் ஏலவிற்பனை நிலையமாக விருத்தி செய்வதற்கான எதிர்காலத் திட்டங்களும் தற்போது தீட்டப்பட்டு வருகின்றன.

திறந்திருக்கும் நேரம் - மு.ப. 8.30 தொடக்கம் பி.ப.6.00 மணி வரை. (போயா தினங்கள் நீங்கலாக)

 

 

பதிப்புரிமை © 2008- 2010 சுவஹஸ்மல் செவன பூங்காக்கள் நிறுவனம். நிர்மானிப்பு பூரனீ இன்ஸ்பிரேஷன்