Skip to content
 

தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம்

You are here: முகப்பு
முகப்பு
அறிமுகம்
  அறிமுகம்

கனேவத்த மூலிகைத் தோட்டம் வட மேல் மாகாணத்தின் குருநாகலில் இருந்து சுமார்15 மைல் தொலைவில் உள்ளது. இடைப்பட்ட வலயத்தில் அமைந்துள்ளமையால் பெரும் எண்ணிக்கையிலான மூலிகைச் செடிகளை வளர்க்கப் பொருத்தமான மிகச் சிறந்த நிலையமாக விளங்குகின்றது. பூங்காவின் பரப்பளவு 52 ஏக்கார்களாகும். நிலப்பரப்பின் அரைவாசிப் பகுதி தெங்குச் செய்கையால் மூடப்பட்டுள்ளது. செய்கை பண்ணப்படுகின்ற மூலிகைத் தாவரங்களில் பெரும்பாலானவை மரங்களுடன் தொடார்பு கொண்டவையாகும். நெல்லி, மகிழம். சந்தனம், புளி மற்றும் எத்தெமட்ட ஆகிய மரங்களைப் பரவலாகக் காணலாம்.

கனேவத்த மூலிகைத் தோட்டத்தில் விவசாய ஆலோகரொருவரை முதன்மையாகக் கொண்ட 09 பேரை உள்ளடக்கிய பணியாட்டொகுதி உண்டு. தற்போது பின்வரும் பணிகள் ஈடேற்றப்பட்டு வருகின்றன.

1. பாரிய அளவிலான எண்ணிக்கை கொண்ட மூலிகைச் செடிகளுக்கான மூலவுயிhர்ப் பரம்பரையலகுத் தொகுப்பினைப் பராமாpத்தல்.
2.நெல்லி, புளி, அரமி மற்றும் வெனிலா போன்ற மூலிகைச் செடி
 உற்பத்திகளை சேகாpத்தலும் சந்தைப்படுத்தலும்.
3.தெங்கு அறுவடை பெறுதலும் சந்தைப்படுத்தலும்.
4.பாடசாலை மாணவார்களுக்கு, தொண்டார் அமைப்புகளுக்கு, பொது
 மக்களுக்கு கல்வி வசதிகளை வழங்குதல்.
5. மூலிகைத் தாவரங்களைப் பெருக்கம் செய்வதற்கான நாற்று மேடைகளைப் பராமாpத்தல்.
  

கீழே குறிப்பிடப்பட்ட கல்விச் செயற்பாடுகளும் கனேவத்த மூலிகைத் தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
1. மூலிகைத் தாவரங்களை இனங்காணல்.
2. மூலிகைத் தாவரங்களைப் பற்றி பிரச்சாரம் செய்தல்.
3.மூலிகைத் தாவரங்களை இடத்திற்கு வெளியில் பேணுதல்.

 
 
 
 
பதிப்புரிமை © 2008- 2010 தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம். நிர்மானிப்பு பூரனீ இன்ஸ்பிரேஷன்