முகப்பு
தேசிய தாவரத் தொகுப்புக் கூடம்
 
தாவரங்களின் சரியான தாவரவியல் பெயர்களை உத்தியோகபூர்வமாக அறிமுகஞ் செய்வதற்கான பொறுப்பினை வகிக்கின்ற இலங்கையில் உள்ள பிரதானமான அரச நிறுவனமாக அமைவது தேசிய தாவரத் தொகுப்புக் கூடமாகும். தாவரங்களைத் தேடிக்கண்டுபிடித்தல், தாவரங்களை இனங்காணல், மாதிரியுருக்களைத் தயாரித்தல் மற்றும் ஆவணப்படுத்தல் மாத்திரமன்றி இலங்கையின் தாவர வளங்கள் பற்றிய சகலவிதமான தகவல்களையும் உள்ளக்கிய தாவரக் கோவையின் புனராய்வுச் செயற்பாடுகளிலும் தேசிய தாவரத் தொகுப்புக்கூடம் முனைப்பாக ஈடுபட்டுள்ளது. தாவரவியல் மூலங்களைச் சார்ந்த தகவல்களைப் பெற்றுக்கொடுப்பதன் மூலமாக உணவு மற்றும் விவசாயத்துறையின் நிலைபேறான அபிவிருத்திக்காகவும் தேசிய தாவரத் தொகுப்புக்கூடம் பங்களிப்பினை வழங்கி வருகின்றது.

விஞ்ஞான ரீதியான வகைப்படுத்தலுடன் தொடர்புடைய ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு தேசிய தாவரத் தொகுப்புக் கூடம் வசதிகளை வழங்குவதோடு தாவரங்கள் தொடர்பில் சட்டமுறையான சிக்கல்கள் தோன்றுகின்றவிடத்தும் தாவர இறக்குமதி மற்றும் ஏற்றுமதியின் போது தொற்றுநோய்த்தடை காப்பு நிறுவனத்திற்கும் இலங்கைச் சுங்கத் திணைக்களத்திற்கும் சேவையை வழங்கி வருகின்றது. சிவப்புத் தரவுப் புத்தகத்திற்கு அவசியமான தகவல்களை வழங்குவதிலும் பங்களிப்புச் செய்வதோடு அண்மைக் காலமாக இந்நிறுவனம் யேவழையெட சுநன டுளைவiபெ யுரவாழசவைல ஆகவும் அங்கீகாரம் பெற்றுள்ளது. தேசிய தாவரத் தொகுப்புக் கூடமானது உலகின் ஏனைய நாடுகளில் உள்ள பிரபல்யம் வாய்ந்த தேசிய தாவரத் தொகுப்புக்கூடங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் அறிவினையும் மாதிரியுருக்களையும் பரிமாற்றிக் கொள்ளும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளது.

தேசிய தாவரத் தொகுப்புக்கூடத்தின் விஞ்ஞானிகள் ஏற்கெனவே படர்தாவரப் பல்வகைமை (குறிப்பாக பிரியோபீற்றா மற்றும் மரப்பாசிகள்) பற்றிய ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன. பயிர்த் தாவரங்களுடன் தொடர்பினைக் காட்டுகின்ற பயிர் வான் தொடர்புகள் (Crops Wild Relatives) பற்றிய தகவல்களைச் சேகரித்தல் மற்றும் அது பற்றிய நூலொன்றைத் தாயரிப்பதற்கான விசேட கருத்திட்டமொன்றும் தற்போது அமுலில் உள்ளது.